Thursday, July 30, 2015

நம்பிக்கையின் நாயகர் அப்துல்கலாம்







கடந்த திங்கட்கிழமை (27.7.2015) திரு அப்துல் கலாம் அவர்கள் மானவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த செய்தி என்னைப் போன்ற இந்திய இளைஞர்களுக்கு உண்மையில் வருத்தம் தரக்கூடிய ஒன்று.
    
நமது நாட்டில் எங்கு பார்தாலும் ஊழல் அதிகரித்து வருகிறது, பதவியில் இருக்கும் பெரும்பாலோர் தங்கள் சுயலாபத்திற்காக அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர், நல்லவர்களை காண்பதே அரிதாகி வருகிறது அதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்ற சிந்தனையில் உதித்ததே இளைஞர்களையும், மாணவர்களையும் நேரில் சென்று பார்ப்பது என்ற முடிவு. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக அவர் செயல்பட்டவிதம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதிவரை மேடைகளில் பேசும் உரைகள் எதைப்பற்றி இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடனும், சிரத்தை மேற்கொண்டும் தயாரித்துள்ளார். இப்பொழுது நினைத்து பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஆயிரம் அர்ந்தங்கள் பொதிந்துள்ளன தனிமையில் இருக்கும் போது அவர்சொன்ன கருத்துகளை சிந்தித்து பார்த்தால் இது புரியும்.

வாழ்க்கை பற்றின புரிதலே பலபேரிடம் இல்லை என்று உணர்ந்ததாலே மிகப்பெரிய லட்சியங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அரைகூவல் விடுத்தவர். என் வாழ்கையிலேயே நிறைய இதை பார்த்திருக்கிறேன். பெரும்பாலோரிடம் என்ன ஆவப்போரிங்க என்று கேட்டால் படித்து முடித்து சீக்கிரமா ஒருவேலைய வாங்கி, கல்யானம் பண்ணி செட்லாகிடனும் அதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் என்று கூறுபவர்களாகத்தான் இருக்கின்றனர். ”அரிது அரிது மானிடறாய் பிறத்தல் அரிது” என்று நம் அவ்வை பாட்டி சொன்னது இன்னும் பலபேருக்கு புரியவேயில்லை. கலாம் ஒரு எதார்தவாதி எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு நிறந்தர தீர்வு உண்டு என்பதை ஆழமாக நம்பியவர் என்பதனால் உயர்ந்த லட்சியங்கள் உருவாக கனவு காணுங்கள் என்று கூறினார்.

ஒருவிசயத்தை புரிந்துகொள்ள வேண்டும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கிறது அந்த ஆசை சின்னவயதில் ஏற்பட்ட அனுபவம் அல்லது சமூக சூழ்நிலைகளால் ஏற்பட்ட தாக்கம் என்று நிறைய சந்தர்பங்கள் இருக்கின்றன மனதில் ஆசை உருவாக. எந்த விசயத்தை மனது ஆசைப்படுகிறதோ அந்த விசயத்தை செய்யவும் அதிகம் ஆர்வம் பிறக்கும் ஆகையாலே மனது ஆசைப்படும் விசயங்களில் உங்கள் லட்சியங்களை உருவாக்கி கொள்ளுங்கள். எந்த துறையும் கீழ்தரமானவை அல்ல. பணம் சம்பாதிக்க வாய்புகள் இல்லாத துறைகள் கிடையாது. நாம் நமது திறமையை எப்படி வளர்த்துகொள்கிறோம் என்பதில் தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது என்று கூறிய கலாம் வார்த்தைகளில் ஆயிரம் அர்தங்கள் இருப்பதை நாம் புரிந்து கொளவேண்டும்.

மக்களின் குடியரசுதலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு கலாம் அவர்கள் இன்று நம்மோடு இல்லை. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அவர் வாழ்ந்த உன்னத வாழ்க்கை நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் ஏராளமானோர் மனதார அஞ்சலி செலுத்தியதும், பல அமைப்புகள் தாமே முன்வந்து உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளான இன்று (30.07.2015) கடைகள் அடைக்கப்படும், லாரிகள் இயங்காது, திரையரங்குகளில் காட்சிகள் நிறுத்தப்படும் என்று அறிவித்தது மனம் நெகிழவைத்த தருணங்கள். என்னைப் பொருத்தவைரை கலாம் அவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவது என்பது அவர் விட்டுச் சென்ற பாதையில் உணர்வுப் பூர்வமாக வாழ்வது என்பதுதான்.

No comments:

Post a Comment