Tuesday, July 14, 2015

பழங்களை நாம் ஏன் உண்ண வேண்டும்?




உணவே மருந்து என்று அன்றாடம் தொலைக்காட்சிகளில் தோன்றும் மருத்துவர்களும், தன்னார்வ தொண்டர்களும் நா வரண்டு பேசுவதை என்றைக்காவது காது கொடுத்து கேட்டதுண்டா நீங்கள்? அதுக்கெல்லாம் எங்கப்பா நேரமிருக்கிறது என்று கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக சில தகவல்கள் இங்கே தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உண்ணும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றன. பொதுவாக இவை தாவரங்களின் மூலமாகவோ அல்லது இறைச்சி, பால், முட்டை போன்றவைகளின் மூலம் பெறப்படுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. உணவினை மூன்று முக்கியவகைகளாக பிரித்துள்ளனர் அவை

  1. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடிய உணவுகள்
  2. உடலின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவுகள்
  3. நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கக் கூடிய உணவுகள்

மேற்ச்சொன்ன மூன்று வகை உணவுகளும் இயற்கையில் விவசாயம் செய்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் மூன்றாவதாக சொல்லப்பட்டிருக்கும் உடலை பாதுகாக்கக்கூடிய தன்மை நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கள் மற்றும் பழங்களுக்கு உண்டு என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? வேறு வழியில்லை ஏனென்றால் நீங்கள் நம்ப வேண்டியதற்கு தேவையான நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

என்னய்யா அது? கொஞ்சம் புரியும் படித் தான் சொல்லேன்ய்யா

இல்லைங்க இந்த வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டிஆக்ஸிடெண்ட் என்று சொல்லக்கூடிய சாமாச்சாரங்கள் பழக்களில் அதிகம் காணப்படுகின்றன. அரிசியிலோ, கோதுமையிலோ இவைகள் காணப்படவில்லை.

அண்றாடம் நம்மைச் சுற்றி பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் நமது உடலை தாக்கிய வண்ணம் இருக்கின்றன. மிகக் கொடிய நோய்கள் தாக்கிவிட்டால் தாங்கக் கூடிய பலம் வேண்டுமே. உடலில் நோய் நொடிகள் அண்டாமல் நம்மை பாதுகாத்து, ஆரோக்கியமாக வாழ வைட்டமின்ஸ், மினரல்ஸ் கண்டிப்பாக தோவை. இந்த  ஆண்டிஆக்ஸிடெண்ட் என்று சொல்லக்கூடிய விசயம் உடலில் உள்ள செல்கள் சரிவர வேலை செய்ய உதவிபுரிபவைகள் ஆகும். இவைகளும் பழங்களில் காணப்படுகின்றன.

இயற்கையில் கிடைக்கக்கூடிய உணவுகளே மருந்தாகவும் வேலை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருப்பதால் அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது அப்படி ஒன்றும் தெய்வக் குற்றமான காரியம் இல்லை. ஆகவே மக்களே இன்றிலிருந்து பழங்களை அன்றாடம் உண்ணப் பழகிக்கொள்வோம் நமது உடலினை அன்னிய சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ள நமக்கு இதைவிட ஒரு எளிய வழி இல்லை.

No comments:

Post a Comment