Sunday, January 1, 2023

புத்தாண்டை வரவேற்போம், 2023

2020-ல் கொரோனா வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் எனக்கு பீதியுடன் தான் கழிகிறது. மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பது போல தினமும் செய்திகளில் புதிதாக வைரஸ் தோற்றம் பற்றியும் அதன் பரவல் பற்றியும் வருவது தவருவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் பல பேர் வேலை இழந்தனர். பல குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுடன் சேர்ந்து கொண்டன. இவை எல்லாவற்றையும் சமாளிக்க விலைவாசி ஏற்றம், புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமை, ஆட்கள் குறைப்பு போன்ற சலுகைகளை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு வழங்கி இன்னல்களை கலைய முயற்சித்தது. எல்லாவற்றையும் கடந்து இன்னும் நம்பிக்கை இழக்காமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு வரும் ஆண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

இந்த வருட்த்தில் நான் செய்ய நினைக்கும் விசயங்கள் இவை

1. அடிப்படை அறிவியல் குறிப்பாக இயற்பியல் மற்றும் கணிதம் பற்றி அதிகம் படிப்பது மற்றும் தெரிந்து கொண்ட விசயங்களை தமிழில் எழுதுவது.

2. குறைந்த விலையில் விவசாயத்திற்கு தேவையான எளிய கருவிகளை வடிவமைத்து உருவாக்குவது.

3. ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்டு சின்ன சின்ன பிராஜட்டுகளை செய்து கற்றுக் கொள்வது.

4. நீண்ட தூர பயணங்கள் மேற்கொண்டு இயற்கைய ரசிப்பது

5. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் எளிய வாழ்க்கையை வாழ முயற்சிப்பது

6. ஒற்ற கருத்துடைய நண்பர்களை வளர்த்துக் கொள்வது.

7. புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவது.

8. ஏற்கனவே வாங்கிய புத்தகங்களை படிப்பது

9. மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியா வைத்துக்கொள்வது

லிஸ்ட் ரொம்ப பெரிசா போகுது.... 

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

அன்புடன்

தா. அருள்.