Monday, June 24, 2013

மனமாற்றம்



சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தக விமர்சனம் என்னை நெத்திபொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. அந்த கட்டுரை இப்படி ஆரம்பித்தது “ஆண்கள் ஆண்களாகவும், பெண்கள் பெண்களாகவும், நாய்கள் நாய்களாகவும் இருக்க முடிகிறபோது, நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?”என்று. இந்த புத்தகத்தை ஒரு திருநங்கை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பொயர் I am vidya, ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா. மேற்சொன்ன இரண்டு வரி ஆரம்பத்தை படித்தவுடனே எனக்கு ஒரளவுக்கு புரிந்துவிட்டது புத்தகம் எந்தவித கருப்பொருளை கொண்டதாக இருக்கும் என்று. உண்மையில் வித்யா அவர்கள் கேட்க்கும் கேள்வி ஞாயமானது ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது. எனது இரயில் பயண அனுபவங்களில் சில விசய்ங்கள் திருநங்களைப்பற்றி தெரிந்து கொண்டேன். யாரும் நம்பி வேலைக்கொடுக்க முன்வருவதில்லையென்றும் பொற்றோர்களே தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள தயங்குவதாகவும் பிழைக்க வேறு வழியின்றி இரயில்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக மாற்றிக்கொண்டதாகவும் என்னிடம் ஒருமுறை ஒரு திருநங்கை கூறினார். இவை யாவும் பாவம் என்று பரிதாபப்டக்கூடிய விசயமாக எனக்குத் தெரியவில்லை. சமுதாயம் அவர்கள் மீது வைத்திருக்கும் பார்வையை மாற்றிக் கொண்டாலே போதும் அவர்கள் கவுரவமாக வாழும் நிலை ஏற்பட்டுவிடும். அந்தக் கட்டுரை இப்படி முடிந்திருந்தது “நான் (என்போன்ற மக்களுக்காக) சொர்கத்தை கேட்கவில்லை. எங்களை நரகத்திலிருந்து விடுவியுங்கள்” என்று.
                    
            இப்புத்தகத்தை இப்போதைக்கு நான் படிக்கப்போவதில்லை கண்டிப்பாக அது மனவலியை ஏற்படுத்தும். ஆனால் இன்றிலிருந்து எனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது திருநங்களைப் பற்றி. நம் சமூதாயத்தில் இந்தப் புத்தகம் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மனமுதிர்ச்சியடையாத நிறைய மனிதர்கள் வாழும் இச்சமூதாயத்தில் வித்யாவின் எதிர்பார்ப்பு ஒரு சவாலான காரியமே.