Wednesday, February 5, 2014

பொழுதுபோக்கு பொளதீகம் (Physics for Entertainment)


        19-ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களுல் ஒருவராக கருதப்பட்ட யா.பெரல்மான் எழுதிய மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புத்தகத்தை பற்றிய பதிவு தான் இது. புத்தகத்தின் பெயர் பொழுதுபோக்கு பொளதீகம் (Physics for Entertainment). சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படித்தபின் இரண்டு மூன்று முறை மறுவாசிப்பு செய்யுமளவிற்க்கு சுவாரசியமாக இதன் மொழிநடை இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

இப்புத்தகத்தை பற்றிய என்னுடைய சிறு கருத்து:
    
         இயற்பியலில் நாம் நிறைய தியரிகள் படித்திருக்கிறோம், இன்றைக்கும் படித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அத்தனை விதிகளும் சமன்பாடுகளும் நடைமுறை வாழ்க்கையில் எங்கு, எப்படி பயன்படுகிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றின தெளிவான புரிதல் நமக்கு ஏற்பட்டிருக்கிறதா என்றால் பெரும்பாலக நம்மிடையே இல்லை என்றுதான் பதில் வரும். இப்புத்தகத்தின் சிறப்பே இதுதான் ஒரு சிறந்த நன்பன் பக்கத்தில் உட்கார்ந்து சுவாரசியமாக கதை சொல்வதைப் போல ஒவ்வொரு பகுதியும் இதில் எழுதப்பட்டிருக்கின்றது. நிலையான இயந்திரங்கள் (Perpetual Motion Machines), அட்மாஸ்ப்பியர்க் பிரஸ்ஸர் போன்ற நிறைய விசயங்கள் தெளிவாக புரிந்து கொண்டேன். நான் ஐஐடி கேட் எக்சாமிற்கு படித்துகொண்டிருக்கையில் இப்புத்தகம் எனக்கு இயற்பியல் பற்றிய பல அறியாமைகளை போக்கியது என்பது உண்மை. இதுபோன்ற புத்தகங்கள் சிறுவயதில் படிப்பதன் மூலம் பின்னாட்களில் ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில் எந்தவித பிரச்சினைகளும் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

என்றைக்காவது எதாவது பொழுதுபோக்காக படிக்க வேண்டும் என்று தோன்றுவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். ஏனென்றால் இது டெக்ஸ்ட் புக் கிடையாது. நாவல் என்று கூட வைத்துக்கொள்ளலாம். நமது எல்லா பாடப்புத்தகங்களும் இதுபோலவே இருந்தால் எப்படி இருக்கும்???


 
பின்குறிப்பு: இப்புத்தகம் தற்பொழுது நியூ செஞ்சுரி புக் கவுஸ் பதிப்பகத்தின் மூலம் பதிப்பித்து விற்பனை செய்யப்படுகிறது ஆர்வமிருப்பவர்கள் வாங்கி பயன்பொறலாம்.