Wednesday, July 15, 2015

கல்விக் கண் திறந்த வல்லல்: காமராஜர்




தங்கமணி மாளிகையில்
தனிவயிரப் பந்தலிட்டு
மங்கையர்கள் சுற்றிவந்து
மங்கலமாய் கோலமிட்டுத்
திருநாள் அலங்காரச்
சிலைபோல் அலங்கரித்து
வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும்
மகனாக வந்ததில்லை!

வண்ணமலர்த் தொட்டிலிலே
வடிவம் அசைந்நதில்லை!
மாமதுரை நாட்டில்
மறவர் படை நடுவில்
தேமதுரத் தமிழ்பாடும்
திருநாடார் தங்குலத்தில்
வாழையடி வாழையென
வந்த தமிழ்ப் பெருமரபில்
ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீ பிறந்தாய்!

நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஓர்குடிலில்
ஐயா நீ வந்துதித்தாய்!

            -கவியரசு கண்ணதாசன்

இன்று ஜீலை 15 கர்மவீரர் என்றும், தியாகச் சுடர் என்றும், தென்னாட்டின் காந்தி என்றும் போற்றப்படுகிற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 113-ஆவது பிறந்த தினம் கொண்டாப்படுகிறது. மொத்தம் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தில் அய்யா அவர்கள் செய்த ஆட்சிதான் தமிழக வரலாற்றை மாற்றி அமைத்தது. கல்வித்துறையில் இவர்கொண்டு வந்த சீர்மிகு திட்டங்கள் மூலம் என்னெற்ற ஏழைக் குழந்தைகள் கல்வி பெற்றனர். இன்றும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். தொழில் துறையில் தமிழகத்தை முன்னுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவரையேச் சாரும். வேளாண்மைக்காக இவர் திறந்து வைத்த அனைக்கட்டுகள் தான் இன்றைக்கும் நமக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கின்றன.

மொத்தமாக 72 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்த காமராஜர் தான் இறக்கும் போது தன்னுடைய வங்கிக் க்கில் 125 ருபாய் பணம் மட்டுமே இருந்தது. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உன்னத வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். 



தங்கமே, தண்பொதிகைச் சாரலே, தண்ணிலவே

சிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே!

முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்.

                                      -கவியரசு கண்ணதாசன்
 
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, சிறிய தொண்டனாக விடுதலைப் போராட்டத்தில் வாழ்க்கையத் தொடங்கி, தன்னுடைய தன்னலமற்ற உழைப்பால், தியாகத்தால் மக்கள் தலைவராக உயர்ந்த காமராஜரின் வாழ்க்கையை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டியது தலையாய கடமைகளில் ஒன்றாகும்.  

No comments:

Post a Comment