Friday, March 21, 2014

மனிதனை கடவுள் படைத்தானா?


  இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு மணிசார் பேச்சை என்னுடய mp3 பிளேயரில் கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் ஒரு சுவாரசியமான விசயம்.

கடவுள் மனிதனைப் படைத்தானா? என்ற கேள்விக்கு இப்படி பதில் தந்தார்

“மனிதனுக்கு அறிவு ஏற்பட்ட பிறகுதான் படைப்பை பற்றி அவன் சிந்திக்க தொடங்குகின்றான். அறிவியலில் காஸ்மாலஜி சொல்லும் பிக் பேங்க் தியரி, சூரியன், கோள்கள் உருவாவதற்கு முன் ஒரு வாயுக் கோலமாக இருந்தது என்று கூறினாலும் அந்த வாயுக் கோளத்திற்கு ஆதி முதலாக இருப்பது யார்? ஏதோ ஒன்று இருப்பதால் தான் வாயுவே தோன்றியிருக்க முடியும். கடவுள் எல்லா உயிரினங்களையும் படைக்கவில்லை ஒரே ஒரு உயிரை மட்டும் படைத்துவிட்டு மற்றவைகள் பரிணாமத்தின் படி தோன்றியதாகவும் ஒரு விளக்கம் சொல்லப்படுகின்றது”.

என்று சொல்லிவிட்டு கடைசியில் கன்குலுசன் இப்படி சொல்கிறார்

“மனிதன் குரங்காக இருந்தபோதோ அல்லது மாடோ, நாயோ மற்ற விளங்குகளோ இதைப்பற்றி சிந்திக்கவில்லை மனிதனுக்கு அறிவு ஏற்பட்ட உடனே தான் கடவுளைப் பற்றி சிந்திப்பதால் மனிதன் தான் கடவுளைப் படைத்தான் அதே சமயத்தில் கடவுளும் மனிதனைப் படைத்தான். A = B என்றால் B = A என்றாவதைப்போல எடுத்துக்கொள்ளலாம் என்றார்”

கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயந்தான் போலிருக்கு…



நன்றி:
முனைவர். க. மணி அவர்கள்,
அறிவியல் நேரம் நிகழ்ச்சி,
ஞானவானி பண்பலை ஒலிபரப்பு,
கோயமுத்தூர்.

No comments:

Post a Comment