Sunday, March 2, 2014

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்


அண்மையில் கோயமுத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரில் நிகழ்ந்து கொண்டிருந்த புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பொதுவாக இம்மாதிரியான வாய்ப்புகளை கையில் பணமில்லையென்றாலும் முடிந்தவரையில் நான் தவறவிடுவதில்லை. கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன குறிப்பாக மிர் பதிப்பக தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் குறைந்த விலையில் அதிகம் காணப்பட்டன. வழக்கமாக நான் அதிகம் விரும்பும் அறிவியல் சார்ந்த புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கையில் என் கண்ணில் பட்டது இந்த புத்தகம். புத்தகத்தின் தலைப்பு: சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல், ஆசிரியர்கள்: வீ.இரவிகுமார், மு.வெ.அரங்கசுவாமி மற்றும் கா.அப்பாவு. இப்புத்தகத்தை பார்த்தவுடன் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு. கல்லூரி படிக்கும் நாட்களில் இம்மாதிரியான புத்தகங்கள் எனக்கு கிடைத்திருந்தால் எனது அறிவு கொஞ்சமாவது வளர்ந்திருக்கும்,

புத்தகதிதின் ஆசிரியரான இரவிக்குமார் எனக்கு பாடம் எடுத்தவர். வகுப்பில் மகா முட்டாள் மாணவனாகிய என்னை அவருக்கு தெரிந்திருக்க வாய்புகள் குறைவுதான். அவருக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். 

வேளாண் பொறியியல் பட்டதாரியாகிய என்போன்றவர்கள் கட்டாயம் இப்புத்தகத்தை படிக்க வேண்டும். விவாசாய நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனம் அதிக பயனனுறுதிறனளிக்கும் வகையில் திட்டமிடுதல் என்பது சாதாரண காரியமில்லை. ஜெயின் இரிகேசனில் சுமார் ஒன்னறை ஆண்டுகள் வேலைபார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். ஒரு செட்டு நீர் பாசன அமைப்பு சரிவர அமையாவிட்டால் அதில் போட்ட முதலீடு வீண். மண் மற்றும் நீர் பரிசேதனை, நில வாட்டம், எந்தமாதிரியான பயிர்களுக்கு எந்த வகை டிரிப்பர்களை தேர்ந்தெடுப்பது, பில்டர்களின் உபயோகம், உரம் செலுத்தும் அமைப்பு போன்றவற்றை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நேர்ந்தால் இத்தொழில்நுட்பத்தின் முழுமையான பயனை பெறமுடியாது. இவைகளெல்லாம் சொட்டு நீர் பாசணத்தை திட்டமிடுவதற்க்கு பால பாடம் மாதிரியானவைகள். இவ்விசயங்கள் பொரும்பாலான இடங்களில் சரிவர அமைக்கப்படுவதில்லை என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.  இதனாலேயே நிறைய விவசாயிகளுக்கு இத்தொழில் நுட்பத்தின் மேல் அதிகம் ஈர்ப்பு ஏற்படுவதில்லை. வேளாண் பொறியியல் படிப்பை பிரத்யேகமாக படித்த என்போன்ற வேளாண் பொறியியாளர்களுக்கே அதிகம் குழப்பங்கள் இருக்கையில் டிப்லமோ மட்டும் படித்து இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு தொழில்நுட்ப நுணுக்கங்கள் புரிய அதிக நாட்கள் ஆகும். மேலும் வேளாண்மை அல்லாத படிப்பு படித்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டால் அவர்களின் நிலமை இன்னும் மோசம். அந்த வகையில் இந்த புத்தகம் சிறப்பை பெறுகிறது.

நான் இந்த புத்தகத்தை படித்த பிறகு பெர்னோலி தத்துவத்தை தெளிவாக புரிந்து கொண்டேன். என்னைப் பொருத்தவரையில் இதில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை தத்துவங்கள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நிர் பாசனப் திட்டமிடுதலுக்கு மட்டும் பயன்படாமல் குளாயினுள் நீரை கடத்துவது பற்றிய பொதுவான விசயங்கள் தெரிந்து கொள்ளவும் இப்புத்தகம் பயன்படும் என்பது என்கருத்து.

 எளிய மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் படிப்பதற்கு அதிக சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. இது புத்தக ஆசிரியரின் இத்துறை பற்றிய அனுபவத்தின் பிரதிபலிப்பாகும். தாய்மொழி வழிக்கற்றலே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் என்ற காந்தியடிகளின் கூற்றினை நினைவுபடுத்துவது போல் உள்ளது இப்புத்தம். மேலும், அறிவியலில் புரிந்து கொள்வது தான் முக்கியமே தவிர எந்த மொழியில் எழுதப்பட்டுருக்கிறது என்பது முக்கியமல்ல என்பது என் நிலைப்பாடு. அந்தவகையில் ஆசிரியர் இது போன்ற மேலும் பல நூல்களை எழுதிட வேண்டும். அதோடுமட்டுமில்லாமல் தமிழில் எழிதினால் கிரிடிட் அதிகம் கிடைக்காது ஆங்கிலத்தில் எழுதினால் தான் பலன்கள் அதிகம் என்று கருதிகொண்டிருப்போர்கள் தங்களின் இருக்க மனநிலையை தளர்த்தி தமிழில் இம்மாதிரியான வேளாண் பொறியியல் சார்ந்த புத்தகங்களை எழுதிட வேண்டும் அது என்போன்ற இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரனமாக இருக்கும்.

இப்புத்தகம் எத்தனை பேரை சென்றடைந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. ஆகையால் நான் என் நண்பர்களுக்கு அதிகம் பரிந்துரைக்கும் சமீப்பத்திய புது வரவு இதுவாகும்.

புத்தக விபரம்:
தலைப்பு:      சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்
ஆசிரியர்கள்:  வீ.இரவிகுமார், மு.வெ.அரங்கசுவாமி மற்றும் கா.அப்பாவு
பதிப்பகம்:     தாமரை பப்ளிகேசன்ஸ் (பி) லிட், சென்னை
விலை:       ரூ.80/-

1 comment: