தாரணை என்பது ஒன்றைப் பற்றிய தீவிர எண்ணம்.
ஆன்மீகத்தின் இறுதிநிலை சமாதி (எண்ணமற்ற நிலை). அன்றாட வாழ்வில் நமது மனம் சதா சர்வ
காலமும் எதையாவது நினைத்துக் கொண்டும் சிந்தனை செய்து கொண்டும் இருக்கிறது. சிந்தனையும்
ஷணம் ஷணம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதை மனச்சலனம் என்று கூறுகின்றனர். மனது சலனப்படுவதால்
எதாவது ஒரு விசயத்தில் மட்டும் மனதை நீண்ட நேரம் குவித்து (concentration) வைக்க முடிவதில்லை.
ஒரு புத்தகத்தை கவனச் சிதறலில்லாமல் படித்தால் அதில் உள்ள தகவல்கள் மனதில் உடனே பதிகின்றன.
எப்பொழுது கேட்டாலும் நம்மால் நினைவுபடுத்தி சொல்லமுடிகிறது. நாம் கவனச் சிதறலின்றி
எந்த செயலை செய்தாலும் மிக நேர்த்தியாக விரைவில் செய்து முடிக்க முடிகிறது. யோசித்து
பாருங்கள் நமது கவனத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. தாரனை பழகினால் நினைத்ததை சாதிக்க
முடியும். நமது எண்ணத்திற்கு அத்தனை வலிமை உண்டு என்கின்றனர் யோகிகள்.
இதற்கு
இரண்டு விதமான பயிற்சிகள் தேவை.
- மனதின் ஓட்டத்தை எப்பொழுதும் கவனித்து
கொண்டு இருத்தல்
இப்படி செய்வதால் தேவையில்லாத சிந்தனை எழும்போது
விழிப்புடன் இருந்து சலனத்தை தடுக்க முடியும்.
- எதிர்மறையான எண்ணங்களை (negative
thoughts) எழவிடாமல் தடுப்பது
ஒருநாளில் நமது சிந்தனையில் வரும் 85% எண்ணங்கள்
எதிர்மறை எண்ணங்கள் தான். ஒரு விசயத்தை தொடங்க ஆசை ஏற்பட்டால் உடனே அதைப் பற்றிய எதிர்மறை
எண்ணங்கள் தன்னிச்சையாக உருவாகின்றன. இந்த உலகத்தில் நல்லது என்றும் கெட்டது என்றும்
எதுவும் கிடையாது. நமது மனமே அவ்வாறான தோற்ற பிம்பங்களை தோற்றுவிக்கின்றன.
எதிர்மறை சிந்தனைகள் மனவலிமையை குறைத்துவிடுகிறது.
மேலும் உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது. நோய் நெடிகளை உண்டு பண்ணுகிறது. மனவலிமை குறைந்தால்
தாரணை கைகூடாது. எதிர்மறை எண்ணங்கள் மனதை சலனமில்லாமல் ஒரே விசயத்தில் குவிப்பதை தடுக்கிறது.
சுவாமி
சிவானந்தா Thoughts power (எண்ணத்தின் ஆற்றல்) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி விரிவாக
எழுதியுள்ளார் மேலை நாட்டினர் law of attraction என்று இதை கூறுகின்றனர். நீ எதை வேண்டும்
என்று நினைக்கிறாயோ அது தானாகவே உன்னை வந்து சேரும். வேதாந்திகள் பிரம்மத்தின் மீது
கவனத்தை குவியுங்கள் நீங்கள் கடவுளாக மாறிவிடலாம் என்கின்றனர். அஞ்ஞானிகளோ பணம் வேண்டும்,
புகழ் வேண்டும் என்று தங்களது எண்ணங்களை குவிக்க ஆசைப்படுகின்றனர். இதற்கு காரணம் இறைவனைப்
பற்றிய சரியான புரிதல் இல்லாததுவே.
யத் பாவம் தத் பவதி (நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே மாறிவிடுவாய்) என்பது பிரபஞ்சத்தின் பொதுவான விதி. எல்லா விசயங்களுக்கும்
இந்த விதி வேலை செய்யும். மனதை சலனப்படாமல் வைத்தால். எதிர்மறை எண்ணங்களை உருவாக விடாமல்
தடுத்தால் இது சாத்தியம். பெரிய சிரமம் எதுவு இதில் இல்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தால்
உலகம் உங்கள் கையில். ஆகவே தாரணை பழகுங்கள் வாழ்கை மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்.
No comments:
Post a Comment