Sunday, May 10, 2015

ஆற்றல் (Energy)



அறிமுகம்:
ஆற்றல் பலவகைப்படும் அவை வெப்ப ஆற்றல், மின் ஆற்றல், வேதி ஆற்றல், நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் என பிரிக்கப்பட்டுள்ளன என்று பள்ளி பாடங்களில் நாம் படித்ததுண்டு. ஆனால் நான் இங்கு ஆற்றல் என பொதுவாக குறிப்பிடுவது பொட்ரோல், டீசல், நிலக்கரி, சூரியன் மற்றும் காற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல்களாகும் இவையும் மேற்குறிப்பிட்ட வகைகளுக்குள் எதோ ஒருவகையில் சம்பந்தம் உடையது என்பது கூர்ந்து கவனித்தால் புரியும்.

பெருகி வரும் மக்கள்தொகையினால் பூமியிலுள்ள ஆற்றல் வளங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன குறிப்பாக நிலத்திற்கடியில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி போன்றவைகளை சொல்லலாம்.  மேலும் இவைகளை எரிப்பதினால் சுற்றுசூழல் மாசடைகிறது. அதுமட்டுமில்லாமல் உலக வெப்பமயமாதல் பிரச்சினை இன்று மனிதகுளத்திற்கு பெரிதும் சவாலாக அமைந்துள்ள ஒரு பிரச்சினை. இவைகள் எப்படி உருவானது?, கட்டுபடுத்தும் காரணிகள் என்னென்ன? அழிந்து வரும் ஆற்றல் வளங்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கக்கூடிட வளங்களை நமது தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி பயன்படுத்துவது?  என்னென்ன தொழில் நுட்பங்கள் உள்ளன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு முதலில் ஆற்றல் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம்.

ஆற்றல்:

     வேலை செய்யும் திறனே ஆற்றல் எனப்படும். ஆற்றலை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்; காற்றைப் போல. ஆற்றலை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆற்றல் பற்றின வரையறையை கொஞ்சம் புரியும் படி விளங்கிட கீழ்கண்ட உதாரணம் நமக்கு உதவும். ஒருவர் உருவத்தில் மெலிந்தவராக காணப்படுவார் ஆனால் உடலை வருத்தி அதிக வேலை செய்யும் திறன் உள்ளவராக இருப்பார். அதேசமயம் உடல் பருமன் உள்ளவர்கள் உடலை வருத்தி வேலை செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவர் எவ்வளவு வேலை செய்திருக்கிறார் என்பதை பொருத்து அவரிடம் உள்ள ஆற்றலை கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேலை செய்பவர்களிடம் ஆற்றல் அதிகம் உள்ளதென்றும் குறைவான வேலை செய்பவர்களிடம் ஆற்றல் குறைவு என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மேற்கண்ட வறையரை இயந்திரங்களுக்கும் பொருந்தும்.   

ஆற்றலின் அலகு ஜீல் ஆகும்

ஆற்றலின் வகைகள்:
இரண்டு வகையான ஆற்றல்கள் உள்ளன அவையாவன 

1.  புதுபிக்கக்கூடிய ஆற்றல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல்களுக்கு புதுபிக்கக்கூடிய ஆற்றல் எனப்படும்.

உதாரணம்: சூரிய ஆற்றல், காற்றின் மூலம் பெறக்கூடிய ஆற்றல்

2. புதுபிக்க முடியாத ஆற்றல்

ஒருமுறை பயன்ப்டுத்திவிட்டால் மீண்டும் அவைகளிடமிருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது இவ்வகை ஆற்றல்களுக்கு புதுபிக்க முடியாத ஆற்றல் என்று பெயர்.

உதாரணம்: பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் ஆற்ற்ல்கள்

  மேற்கண்ட ஆற்றல்கள் நிலத்திற்கடியிலிருந்து பெறப்படுவதால் இவைகளின் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களுக்கு மாற்று தீர்வாக சூரிய மற்றும் காற்று ஆற்றல்களை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகளும் அரசாங்கங்களும் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment