இக்கடிதம் அக்டோபர் 5, 2015 அன்று எழுதியது.
என்னை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையை பற்றி அழுத்து கொள்வான் பெரும்பாலும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும். எப்பொழுது நிறந்தமான அரசாங்க வேலை கிடைக்குமோ? எப்பொழுது கல்யாணம் ஆக போகிறதோ? என்கிற புலம்பல்கள் சில நேரங்களில் அதிகமாக கூட இருக்கும். ஆனால் மிகவும் அன்பானவன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமைந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சி எப்பொழுதும் கலகலப்பாக அவனிடம் இருக்கும்.
நண்பா இதை ஏன் உனக்கு சொல்கிறேன் தெரியுமா தினமும் செய்தித்தாள்களில் மனிதர்கள் இறக்கும் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அதை படிக்கும் போதெல்லாம் எந்தவொரு சலனமும் ஏற்படாத மனது ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கும் போது மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்குள் ஒழிந்து கிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளிகொணர்ந்த பெருமை என் நண்பன் இசாந்தீப்பையே சாரும் என எப்பொழுதும் கருதுகிறேன்.
அன்புடன்
தா.அருள்.









